முட்டைக்கோஸின் நன்மைகள்
முட்டைக்கோஸின் நன்மைகள்

உடலுக்கும் குடலுக்கும் முக்கியமான முட்டைக்கோஸ் 

நம்ம எல்லாருக்கும் நல்லா தெரிஞ்ச முட்டைக்கோசு, நமக்கு தெரியாத பல நன்மைகளை தரக்கூடிய உணவு ஆகும். இது ஒரு கோசு வகை காய்கறி. அதனால, இது புற்று நோய்க்கு எதிராக நல்லாவே செயல்படும்.

இந்த முட்டைக்கோசு, நம்ம உடலுக்கும், குடலுக்கும் பல விதத்திலும் உதவியாக இருக்கக்கூடிய Glutamine (குளுட்டமைன்) எனும் அமினோ அமிலத்தை அதிக அளவு கொண்டிருக்கக் கூடிய ஒரு காய்கறி  ஆகும்.

குளுட்டமைனின் முக்கியத்துவம்

Glutamine நம்ம உடம்புக்குள்ள புரதச் சத்துக்களை உருவாக்க உதவும்.  நம்மளோட நோய் எதிர்ப்பு  சக்தியான, ரத்த வெள்ளை அணுக்கள் இயங்குவதற்கு எரிபொருள் போலவும் செயல்படும்.

ஒருவேளை,  நம்ம உடம்புல குளுட்டமைன் குறைபாடு  ஏற்பட்டால்,  நம்ம நோய் எதிர்ப்பு சக்தியும் நிச்சயமாக பாதிக்கப்படும். அதுபோல, குளுட்டமைன் நமக்கு நோய் தொற்று ஏற்படுவதைத் தடுத்து,  ஆரோக்கியத்தை காப்பாற்றும்.

 உடலுக்கு சரி, குடலுக்கு…?

ரத்த வெள்ளை அணுக்களுக்கு மட்டுமில்லாமல்,  குடலில் இருக்கும் செல்களுக்கும் இது எரிபொருளாக செயல்படுகிறது.

எனவே,  நமது நோய் எதிர்ப்பு சக்தியின் பெரும்பகுதியான நம் குடலில்  உள்ள செல்களின் சீரான வளர்ச்சிக்கும், இயக்கத்திற்கும் குளுட்டமைன் அத்தியாவசியமானது.

குளுட்டமைன், குடலின்  உள் பகுதியையும், வெளிப்புறத்தையும்  பிரிக்கும் தடுப்பை பலப்படுத்தி,  குடல் சேதம் அடைவதை தடுக்கும்.

இதனால், மலக்குடல் எரிச்சல் நோய்(Irritable Bowel Syndrome),  இரைப்பை அழற்சி(Gastritis), நெஞ்சு எரிச்சல் (Acid Reflux) போன்ற  வயிறு மற்றும் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். மேலும்,  நம் உடலுக்குள் இருக்கும் சில கெட்ட பாக்டீரியாக்களும், நச்சுத்தன்மை கொண்ட பொருட்களும் உடலில் கலப்பது தவிர்க்கப்படும்.

 அவ்வளவுதானா…?

முட்டைக்கோசு,  நமது செரிமான கோளாறுகளை குறைக்கும், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் மற்றும் கெட்ட கொழுப்புக்களையும் உடலை விட்டு விரட்டும். மேலும், எலும்பின் வளர்ச்சிக்கும்,  உடல்  அழற்சிக்கும் கூட உதவுகிறது.

பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படக்கூடிய முட்டைகோசில் Anti-Oxidants  எனும்  ஆக்சிஜனெற்றிகளும் உள்ளன.

இந்த முட்டைக்கோசை சாலடில் சேர்த்தோ அல்லது அரைத்து ஜூஸாகவோ  கூட உட்கொள்ளலாம். ஆனால், சமைத்து உண்பதாக  இருந்தால், மிதமான அளவு மட்டுமே வேக வைத்து உண்ண வேண்டும்,  நீண்டநேரம் சமைக்க பட்டால், முட்டைக்கோசு அதன் சத்துக்களை இழந்து விடும்.

எனவே,  உடலும் குடலும் ஆரோக்கியமாக இருக்கவும், மேலும் பல பயன்களை அடையவும் முட்டைக்கோசை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

My Cart (0 items)

No products in the cart.